கம்பெரலிய திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட பல வீதிகள் மக்களின் பயன்பாட்டிற்கென கையளிப்பு
Related Articles
கம்பெரலிய திட்டத்தின் கீழ் இரத்தினபுரி மாவட்டத்தில் புனரமைக்கப்பட்ட பல வீதிகள் மக்களின் பயன்பாட்டிற்கென கையளிக்கப்பட்டன. இதற்கென 90 இலட்சம் ரூபா செலவிடப்பட்டது.
கம்பெரலிய திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட பல திட்டங்கள் பாராளுமனற உறுப்பினர் ஏ.ஏ. விஜேதுங்க தலைமையில் மக்களிடம் கையளிக்கப்பட்டன. நுகேபொல, ஹல்எல வீதி, பஹல அமுனுதென்ன உள்ளிட்ட பல வீதிகள் இதன் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டன. இவ்வீதிகள் புனரமைக்கப்பட்டதன் மூலம் தமது விவசாய உற்பத்திகளை சந்தைக்கு எடுத்துச்செல்வதில் இதுவரையில் இருந்து வந்த தடைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அநுராதபுரம் கெக்கிராவ பெப்டிஸ்ட் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு கட்டடம் உள்ளிட்ட பல வசதிகள் கம்பெரலிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படவுள்ளன. அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மிகவும் பழைமைவாய்ந்த பாடசாலையாக விளங்குகின்ற இப்பாடசாலையின் பாதுகாப்பு மதில், விளையாட்டு பார்வையாளர் அரங்கு உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன. பழைய கட்டடங்கள் அனைத்தும் கம்பெரலிய திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ளன. பா.உ இஷாக் ரஹ்மானின் தலையீட்டுடன் இத்திட்டங்களுக்கு என 70 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.