fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மழையுடன் கூடிய வானிலை : சில பகுதிகளில் மண்சரிவு அபாயம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 11, 2019 13:05

மழையுடன் கூடிய வானிலை : சில பகுதிகளில் மண்சரிவு அபாயம்

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையினால் சில பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்துவிழும் அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவிக்கிறது. இதுதொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கவேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளனர். மழைவீழ்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில் மண்சரிவு குறித்து வெளியிடப்படும் அறிக்கைகளுக்கு இணங்க செயற்படுமாறும் தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை நாட்டில் தற்போது நிலவிவரும் பலத்த காற்றுடன் கூடியதான மழைகொண்ட காலநிலை மேலும் சில நாட்களுக்கு தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.

நாடு முழுவதும் மணிக்கு 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் அதேவேளை சில பகுதிகளில் மணிக்கு சுமார் 60 முதல் 65 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுமென கடமையிலிருந்த வானிலையாளர் கே.சூரியகுமாரன் தெரிவித்தார். கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் கடல்சார் ஊழியர்களும் மீனவர்களும் அவதானத்துடன் இருக்குமாறு வானிலையாளர் கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 11, 2019 13:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க