இந்தியாவின் குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களை சூறாவளி தாக்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டு வானிலை அவதான மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் கரையோர பாதுகாப்பு பிரிவினர் மற்றும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரையோர பிரதேசங்களை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் இதுதொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளனர்.