அமெரிக்க பிரஜையொருவரே முதன் முதலில் அமெரிக்காவுடன் ரகசிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உரையாற்றுகையில் :
“தற்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் முதலில் கடந்த அரசாங்கமே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபட் ஓ பிளேக்குடன் இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். அவ் ஒப்பந்தத்தில் பாரதூரமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அமெரிக்க படைகளுக்கு எந்த நேரத்திலும் இலங்கைக்கு வந்து தற்காலிகமாக முகாம்களை அமைத்துக் கொள்ளலாமென அவ் ஒப்பந்ததத்தில் ஷரத்து உள்ளது. அவ்வாறு முகாம் அமைக்கப்படும் போது அமெரிக்க படைகளுக்கு தேவையான உணவு, நீர், மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவதற்கு வழிசமைக்கப்பட்டுள்ளது. அதனை போன்று எமக்கும் ஒரு சாதகமான ஒரு விடயம் உள்ளது. இலங்கை படைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமெரிக்காவுக்கு சென்று தற்காலிகமாக மாத கணக்கில் தங்கியிருக்கலாம். அக்காலப்பகுதியில் அமெரிக்காவும் இலங்கை படையினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். வாழ் நாளில் எப்போதாவது நாம் அமெரிக்காவுக்கு சென்று முகாம்களை அமைப்போமா? ஒரு சிறுவன் கூட இதனை அறிந்து கொள்ளலாம். நாட்டை காட்டிக் கொடுத்து தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய அமெரிக்க பிரஜாவுரிமை பெற்ற நபர் ஒருவர் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போது உலக மக்கள் நகைத்தனர். இது போன்ற ஒப்பந்தங்களை நாம் இல்லாமல் செய்ய வேண்டும்.” என தெரிவித்தார்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/72jonQBdsk4″]
நாட்டை வெற்றிக் கொள்ளும் சவாலுக்கு நாங்கள் தயார் எனும் தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணியின் கண்டி பகுதிக்கான கட்சி புனரமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.