வெளிமட பிரதேசத்தில் இம்முறை ஸ்டோபரி செய்கை வெற்றியடைந்திருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வெளிமட பிரதேசத்தில் தற்போது ஸ்டோபரி பழ அறுவடை இடம்பெற்று வருகின்றது.
இதழ்கஸ்ஹின்ன, ஒஹிய, ரஹன்கல, பொரகஸ் மற்றும் வெளிமட பகுதிகளில் இம்முறை அதிகளவு ஸ்டோபரி செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அறுவடை இடம்பெற்று வருவதுடன் அதற்கு சிறந்த விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக உயர் சந்தைகள் மற்றும் உல்லாச பயணிகளை இலக்காக வைத்தே ஸ்டோபரி பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 300 முதல் 500 ரூபாவிற்கு தங்களிடமிருந்து ஸ்டோபரி பழங்கள் கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.