தேசிய கணக்காய்வு காங்கிரஸ் நெஸ்கோ 2019 திட்டத்தின் கீழ் இலங்கை விற்பனை நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ஸ்லிம் நெஸ்கோ 2019 விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. www.nasco.lk எனும் இணையத்தளத்தில் இதற்கான விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்ய முடியும்.
விண்ணப்பங்கள் அனைத்தும் இம் மாதம் 28ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி அல்லது 2018 ஏப்ரல் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிதி ஆண்டிலிருந்து 2018 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி அல்லது 2019 ஏப்ரல் 31ஆம் திகதி வரையிலான ஆரம்ப வருட இறுதியில் வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு விபரங்களின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.