fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தற்போதைய வானிலை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும்..

ITN News Editor
By ITN News Editor ஜூன் 10, 2019 09:33

தற்போதைய வானிலை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும்..

நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடும். நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 10, 2019 09:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க