பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் தொடர்ந்தும் பெற்றோர்களை அழைப்பது தேவையில்லையென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பு கருதி முப்படையினர் பொலிசார் சிவில் பாதுகாப்பு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால் பெற்றோர்களை அழைப்பது தேவைப்படாது என கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலப்பகுதியில் மாணவர்களின் பாதுகாப்புக்காக தமது நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணிப்புச் செய்த பெற்றோர்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவிப்பதாக கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.