fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலகக்கிண்ண தொடரில் இன்று இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதல்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2019 12:58

உலகக்கிண்ண தொடரில் இன்று இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதல்.

12வது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 11வது போட்டி இன்று பிறிஸ்டலில் நடைபெறவுள்ளது. திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி, சப்ராஷ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு வெற்றியும், ஒரு தோல்வியுடன் இன்றைய போட்டிக்கு முகம் கொடுக்கின்றன. பிற்பகல் 3 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை நேற்று நடைபெற்ற 10வது போட்டியில் அவுஸ்திரேலிய அணி மேற்கிந்திய தீவுகளை 15 ஓட்டங்களால் வீழ்த்தியது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா ஆரம்பத்தில் தடுமாறிய போதும் பின்னர் கோட்டர் நைலின் 92 ஓட்டங்கள் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 288 ஓட்டங்களை பெற்றது.

ஸ்டீவன் ஸ்மித் 73 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 289 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருந்த போதும் நிதானமற்ற துடுப்பாட்டத்தினால் வெற்றிவாய்ப்பை இழந்தது.

இறுதியாக 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அவஸ்திரேலியா சார்பில் மிகச்சிறப்பாக பந்துவீசிய மிச்சேல் ஸ்டக் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். கோட்டர் நைல் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவானார். இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி இம்முறை உலகக்கிண்ணத்தில் தமது இரண்டாவது வெற்றியை பதிவுசெய்தது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2019 12:58

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க