உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக தாமதமான அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2019 12:50

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக தாமதமான அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக தாமதமான அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். குறித்த அபிவிருத்தி பணிகளின் மேம்பாடு தொடர்பில் மாதாந்தம் தனக்கு அறிக்கையிடுமாறும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இவ்வருட இறுதிக்குள் அபிவிருத்தி பணிகளை நிறைவுசெய்து அவற்றை மக்களின் பாவனைக்கென வழங்கிவைக்க வேண்டுமெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பை உச்சக்கட்டத்தில் உறுதிப்படுத்த அரசாங்கத்தால் முடிந்துள்ளது.

அதனூடாக இலங்கைக்கான சுற்றுலாத்தடைகளை நீக்க பல நாடுகள் இணங்கியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். பொசொன் உற்சவ செயற்பாடுகள் குறித்து அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2019 12:50

Default