5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபரொருவர் கைது
Related Articles
5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குருவிட்ட நகரிலுள்ள மொத்த விற்பனை நிலையமொன்றிலிருந்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கட்டுகெலியாவ பகுதியை சேர்ந்த 27 வயதான சந்தேகநபரொருவர் 3 ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.