டி 56 ரக துப்பாக்கி ரவைகள் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தெணியாய விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய கந்தெல்பான பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
பஸ் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பத்திலேயே துப்பாக்கி ரவைகள் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.