fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலக கிண்ணத்தில் இன்று அவுஸ்திரேலியாவும் மேற்கிந்திய தீவுகளும் மோதல்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 6, 2019 13:11

உலக கிண்ணத்தில் இன்று அவுஸ்திரேலியாவும் மேற்கிந்திய தீவுகளும் மோதல்

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் 10வது போட்டி இன்று நொட்டிங்ஹேமில் நடைபெறவுள்ளது. இம்முறை உலக கிண்ணத்தை வெல்லக்கூடுமென கணிக்கப்படுகின்ற இரு அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி, ஆரன் பின்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியை இன்று எதிர்கொள்கிறது. பிற்பகல் 3 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது. இவ்விரு அணிகளும் உலக கிண்ணத்தில் தாம் விளையாடிய முதல் போட்டியில் வெற்றிபெற்ற நிலையில் இன்று 2வது போட்டிக்கு முகம்கொடுக்கின்றன.

இதேவேளை உலக கிண்ண தொடரின் இரு போட்டிகள் நேற்று நடைபெற்றன. முதல் போட்டியில் தென்னாபிரிக்காவை எதிர்த்தாடிய இந்திய அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது. தென்னாபிரிக்கா வழங்கிய 228 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கையடைந்தது. ஆட்டமிழக்காது 122 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தெரிவானார். இதன்மூலம் இந்திய அணி இம்முறை உலக கிண்ணத்தில் தமது முதல் வெற்றியை பதிவு செய்த அதேவேளை, தென்னாபிரிக்கா அணி தனது 3வது தொடர் தோல்வியை பதிவு செய்தது.

நேற்றைய 2வது போட்டி பங்களாதேஷ் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்றது. லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி 49.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு 245 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து 47.1 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கையடைந்தது. நியுசிலாந்து சார்பில் 82 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த ரோஸ் டெயிலர் ஆட்டநாயகனாக தெரிவானார். இதேவேளை இப்போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக நியுசிலாந்து அணி இம்முறை உலக கிண்ணத்தில் தமது 2வது வெற்றியை பதிவு செய்தது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 6, 2019 13:11

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க