பிரதேச மட்டத்தில் பாடசாலைகளை கேந்திரமாக கொண்டு அறநெறி போதனைகள் மற்றும் நல்லொழுக்க வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்யவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதற்கான சுற்றுநிரூபத்தை இன்றைய தினம் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகா சங்கத்தினரின் ஆலோசனைக்கமைய பாடசாலை மாணவர்களின் பங்கேற்புடன் நல்லொழுக்க வேலைத்திட்டமொன்று அலரி மாளிகையில் எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறவுள்ளது.