மத்திய மலைநாட்டில் மண்சரிவு அபாயம் குறித்து விசேட கவனம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 5, 2019 09:43

மத்திய மலைநாட்டில் மண்சரிவு அபாயம் குறித்து விசேட கவனம்

மத்திய மலைநாட்டில் மண்சரிவு அபாயம் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் சில தினங்களுக்கு 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுகிறது. இதன் போது பலத்த காற்று வீசுவதற்கான வளிமண்டல சூழலும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இன்றையதினம் மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம் காணப்படுகிறது. அதேபோல் சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை பகுதிகளின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக கனமழை பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் சில கடற்பகுதிகள் கொந்தளிபாக காணப்படும் என்பதால் கடல்சார் ஊழியர்கள் மற்றும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

ITN News Editor
By ITN News Editor ஜூன் 5, 2019 09:43

Default