இலங்கை போக்குவரத்து சபைக்கு 68 குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள் சேவையில் ஒன்றிணைக்கப்படவுள்ளன. இதன் முதன் கட்டத்தின் கீழ் சீனாவின் Xiamen Kinglong United Automotive Industry நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 9 சொகுசு நவீன பஸ்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த பஸ்கள் எதிர்வரும் புதன்கிழமை அந்நாட்டிலிருந்து இங்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன. கப்பலில் ஏற்றப்படவுள்ள இந்த பஸ்களின் பெறுமதி 17.1 மில்லியன் ரூபாவாகும். இந்த சொகுசு 68 பஸ்களையும் விரைவாக போக்குவரத்து சேவையில் ஒன்றிணைப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.