போதைப்பொருள் ஒழிப்புக்கென 9 தேசிய வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி விசேட செயலணி தெரிவிக்கிறது. சகல மாகாணங்களையும் உள்ளடக்கி இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக செயலணியின் பணிப்பாளர் சமந்த குமார கித்தலவ ஆராச்சி தெரிவித்தார்.
போதைப்பொருள் ஒழிப்பு வாரத்திற்கு இணைவாக இவை ஆரம்பிக்கப்படுமென அவர் தெரிவித்தார். எதிர்வரும் 23ம் திகதி முதல் ஜுலை மாதம் முதலாம் திகதி வரை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு வாரத்திற்கு இணைவாக இவை முன்னெடுக்கப்படும். போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பது இதன் பிரதான நோக்கமாகும்.
இதேபோல் புதிதாக போதைப்பொருளுக்கு அடிமையாகின்றவர்களை தடுப்பதற்கு நாட்டின் சகல பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களை மையப்படுத்தி விசேட போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பிலும் பரந்த வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் செயலணியின் பணிப்பாளர் சமந்த குமார கித்தலவ ஆராச்சி தெரிவித்தார்.