ட்ரம்ப் – தெரேசா மே ஆகியோருக்கு இடையில் சந்திப்பு
Related Articles
பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் பிரக்ஸிட் நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன் போது ஆராயப்படவுள்ளன.
இப்பேச்சுவார்த்தையில் வெளியுறவு செயலாளர் ஜெரமி ஹன்ட் உள்ளிட்ட பிரிட்டன் பாராளுமன்ற முக்கிய அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மனி மெலானியா டிரம்ப் ஆகியோர் 2 வது எலிசபத் மகாராணி வழங்கிய விருந்துபசாரத்திலும் நேற்றிரவு கலந்து கொண்டனர்.
பக்கிஹம் மாளிகையில் இவ்விருந்துபசாரம் நடைபெற்றது. இதில் இளவரசர்களான சார்ல்ஸ்,வில்லியம் இளவரசி கேட் உள்ளிட்ட ராஜகுடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதே நேரம் அமெரிக்க ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முக்கிய நகரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.