fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எண்ணெய் கசிவு காரணமாக மாசடைந்த குதிகளை சுத்தப்படும் பணிகள் மீண்டும் முன்னெடுப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2019 15:22

எண்ணெய் கசிவு காரணமாக மாசடைந்த குதிகளை சுத்தப்படும் பணிகள் மீண்டும் முன்னெடுப்பு

எண்ணெய் கசிவு காரணமாக மாசடைந்து காணப்பட்ட தெஹிவளை, கல்கிஸ்சை மற்றும் வெள்ளவத்தை கரையோர பகுதிகளை சுத்தப்படும் பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் நிலவிய மழையுடன் கூடிய வானிலை காரணமாக நேற்றைய தினம் சுத்தப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் எண்ணெய் கசிவினால் கரையோர பகுதிகள் பாதிக்கப்பட்டமை குறித்து விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

கப்பலொன்றிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்ப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. இது தொடர்பில் ஆராய்வதற்கென கரையோர பாதுகாப்பு படையணிக்கு சொந்தமான கப்பலொன்று பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2019 15:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க