குழந்தையொன்று பிறக்கும் போதே அதன் பிறப்பு சான்றிதழில் அடையாள அட்டை இலக்கத்தை பதிவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அடையாள அட்டையொன்றை கூட உரிய முறையில் தயாரிக்க முடியாத நாடு நமது நாடாகும். அதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். இவ்வாறான நாட்டுக்கு பாதுகாப்பு எங்கிருந்து கிடைக்கும்? சுதந்திரம் அடைந்தது முதல் கடந்த 20 வருடங்களாக பல்வேறு அரசாங்கங்கள் நாட்டை ஆட்சி செய்துள்ளன. உரிய தேசிய அடையாள அட்டை இல்லாத நாடு நமது நாடாகும். அதற்காக சகல அரசாங்கங்களும் பொறுப்புகூற வேண்டும். குண்டுகளை வெடிக்க வைத்த ஐ.எஸ் பயங்கரவாதியிடம் அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் இருந்துள்ளது. அடையாள அட்டையை குறித்த திணைக்களம் வழங்கியுள்ளது. ஆனால் அது போலியானது. ஒரு குழந்தையொன்று பிறக்கும் போதே அவரது பிறப்புச்சான்றிதழுக்கு அடையாள அட்டையை வழங்குவதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளோம். அதேபோன்று இரண்டு கோடியே 30 இலட்சம் மக்களுக்கு 12 இலக்கங்களை கொண்ட இலக்கத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதனை செய்யும் வரை நாட்டுக்கு பாதுகாப்பு இல்லை.
[ot-video type=”youtube” url=”https://www.youtube.com/watch?v=2RIb9xFyZ98&feature=youtu.be&fbclid=IwAR28jIcVlPwUAYBWxV5b56RJEpJbJbmYQ30QFSM2jZ-n0ZiJoMclHWkJb5Y”]
மாத்தளை எட்வட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரச சேவையை கிராமங்களுக்கு எடுத்துச்செல்வது தொடர்பாக மாத்தளை மாவட்ட அரசாங்க அதிகரிகளுக்கு இங்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான வசந்த அலுவிகார, ரஞ்சித் அலுவிகார ஆகியோரும் கலந்து கொண்டனர்.