மகாவலி அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுபபதில்லையென தெரிவித்து மூன்று பெண் பிரதேச சபை உறுப்பின்ர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மஹியங்கனை கடிகார கோபுரத்திற்கு மேலேரியே இவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
மஹியங்கனை நகரில் உள்ள கடிகார கோபுரத்தில் ஏறி இம்மூன்று பெண் பிரதேச உறுப்பினர்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதி காணி பிரச்சினைகள் மற்றும் வீடுகளுக்கு மின்சாரத்தை வழங்கும் போது ஒருசில மகாவலி அதிகாரிகள் பக்கச்சார்ப்பாக செயற்படுவதாக இவர்கள் குற்றஞ்சுமத்தினர்.
இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்ளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரும் ரிதிமாலியத்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவருமே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.