fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுயாதீன தொலைகாட்சி ஊடக வலையமைப்பின் புதிய பொது முகாமையாளர் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2019 13:49

சுயாதீன தொலைகாட்சி ஊடக வலையமைப்பின் புதிய பொது முகாமையாளர் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்

சுயாதீன தொலைகாட்சி ஊடக வலையமைப்பின் புதிய பொது முகாமையாளராக எஸ்.ஏ.என்.ஆர். சுபசிங்ஹ இன்று தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.

கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் கல்வி கற்ற எஸ்.ஏ.என்.ஆர். சுபசிங்ஹ வர்த்தக பிரிவில் உயர் தரம் பயின்று ஸ்ரீ ஜயவர்தனபுற பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். பட்டய கணக்காளர் நிறுவனத்தின் உறுப்பினர்களில் ஒருவரான இவர் பொருளாதார விஞ்ஞானம் தொடர்பில், பட்டம் உள்ளிட்ட வர்த்தக முகாமைத்துவம் தொடர்பில் பல்வேறு பட்ட படிப்புக்களை மேற்கொணடுள்ளார்.

2002ம் ஆண்டு பிரதமரின் அலுவலகத்தில் கணக்காளராகவும் கைத்தொழில் வர்த்தக வாணிப அமைச்சில் தலைமை உள்ளக கணக்காய்வாளராகவும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் உள்ளக கணக்காய்வாளராகவும் கடமையாற்றியுள்ள அவர் நிர்வாக சேவையில் அனுபவம் வாய்ந்த ஒரு அதிகாரியாவார்.

அத்துடன் 2010ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை, புத்தசாசனம் மற்றும் சமய விவகார அமைச்சில் கணக்காளராகவும் 2013ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை பொது தொடர்புகள் மற்றும் தொடர்பாடல் அமைச்சின் தலைமை கணக்காளராகவும் 2015ம் ஆண்டு முதல் இதுவரை அரச பொது நிர்வாகம் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமிய விவகார அமைச்சின் தலைமை கணக்காளராகவும் கடமையாற்றினார்.

தேசிய கடன் மற்றும் அபிவிருத்தி நிதியத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாகவும் செயலாற்றியுள்ள அவர், நவீன கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழுவின் கணக்காளராகவும் பதவி வகித்துள்ளார். இன்றைய தினம் எஸ்.ஏ.என்.ஆர். சுபசிஹ்க சுயாதீன தொலைகாட்சி ஊடக வலையமைப்பின் தலைவரி திலக்கா ஜயசுந்தர முன்னிலையில் தமது கடமைகளை ஆரம்பித்தார். நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பலரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2019 13:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க