fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரதமருக்கும் எதிர்கட்சி தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2019 13:39

பிரதமருக்கும் எதிர்கட்சி தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பு

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

அலரி மாளிகையில் இவ்விரு தலைவர்களும் சந்தித்துக்கொண்டனர். பிரதமரை சந்திப்பதற்காக எதிர்கட்சி தலைவருடன் மேலும் சில முக்கியஸ்தர்கள் இன்று அலரி மாளிகைக்கு வருகை தந்தனர். பிரதமருடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அமைச்சர் மங்கள சமரவீரவும் கலந்து கொண்டார்.

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில் :

“சுற்றுலா துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. வங்கிகளால் வழங்கப்பட வேண்டிய சலுகைகள், காயமடைந்தவர்கள் தொடர்பிலும் கலந்துரையாடலில் ஈடுபட்டோம். அரசியல் பற்றி நாங்கள் பேசவில்லை. இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்பது தொடர்பாகவே நாங்கள் கலந்துரையாடினோம்.” என தெரிவித்தார்.

அமைச்சர் மங்கள சமரவீர கருத்து தெரிவிக்கையில் :

“பிரதமரின் தலைமையில் எதிர்கட்சி தலைவருடனான குழுவினரை நாங்கள் சந்தித்தோம். 21ம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. அதனால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண பொதிகள் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடினோம். எதிர்கட்சி தலைவர் சுட்டிக்காட்டிய விடயங்கள் தொடர்பில் வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் முழுமையான உரையொன்றை நிகழ்த்துவேன். இக்கலந்துரையாடல் சுமூகமாக இடம்பெற்று, நாங்கள் சுமூகமாக கலைந்து சென்றோம். ஐ.எஸ் தாக்குதல் இடம்பெற்ற எந்தவொரு நாடும் இதுபோன்ற குறுகிய காலப்பகுதியில் வழமை நிலைக்கு திரும்பவில்லை. அதற்காக நாங்கள் ஒருபுறம் மகிழ்ச்சியடைகின்றோம். நாங்கள் குறுகிய காலத்தில் ஐஎஸ் பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து ஒழித்துள்ளோம். ஆனால் தற்போது பாரிய பிரச்சினை ஐஎஸ் பிரச்சினையல்ல. ஒருசில இனவாத, அடிப்படைவாத குழுக்கள் மீண்டும் கருப்பு ஜூலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அதனை தடுத்து நிறுத்துவதே அரசியல் கட்சிகள் என்ற வகையில் அனைவரதும் பொறுப்பும் என எதிர்கட்சி தலைவரிடம் சுட்டிக்காட்டினேன். அதனை அவர் ஏற்றுக்கொண்டார். நிரூபிக்க கூடிய அடிப்படைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் மட்டுமே ஆளுநர்களை அடிப்படைவாதிகள் எனும் கோஷ்டிக்குள் உள்ளடக்கலாம். ஆனால் நான் குறிப்பிடும் அடிப்படைவாதிகள் செயலில் மட்டுமல்லாமல் சொல் அளவிலும் அடிப்படைவாதிகள் என்பதை நிமிடத்துக்கு நிமிடம் நிரூபித்து வருகின்றனர். ” என தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2019 13:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க