fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கதிர்காம கந்தன் உற்சவம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2019 13:33

கதிர்காம கந்தன் உற்சவம்

கதிர்காம கந்தன் உற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து பெருந்தொகை பக்தர்கள் கதிர்காமத்திற்கு பாத யாத்திரையை ஆரம்பித்துள்ளனர். அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் பின்னர் தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் இவ்வாறு பெருமளவு பக்தர்கள் கதிர்காமத்திற்கு யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர்.

வடகிழக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் யாத்திரையை மேற்கொள்ளும் இந்த பக்தர்கள் மட்டக்களப்பில் பல்வேறு ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் தமது யாத்திரையை தொடர்கின்றனர்.

திருமலை வெறுகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் இருந்து கதிர்காமத்திற்கு யாத்திரையை மேற்கொண்ட குழுவினர் மட்டக்களப்பிற்கு வருகை தந்துள்ளனர். இம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் வழிபாடுகளை மேற்கொண்ட இவர்கள் தற்போது ஆணைபந்தி சித்தி விநாயகர் ஆலயத்தில் தங்கியுள்ளனர். நாளை கதிர்காமத்திற்கான யாத்திரையை தொடர போவதாக இவ்யாத்திரை கோஷ்டியின் ஏற்பாட்டாளர் துரைசாதி வேலுசாமி தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2019 13:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க