fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சஹ்ரானினுடையதாக கருதப்படும் மடிக்கணினி மற்றும் 50 இலட்சம் ரூபா மீட்பு

ITN News Editor
By ITN News Editor மே 31, 2019 18:08

சஹ்ரானினுடையதாக கருதப்படும் மடிக்கணினி மற்றும் 50 இலட்சம் ரூபா மீட்பு

தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவரான மொஹமட் சஹ்ரானின் அம்பாரை மாவட்ட தலைவரான கல்முனை ஷியாமினால் மறைத்துவைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அரச புலனாய்வு துறையின் அம்பாரை அலுவலகத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றின் பேரில் இப்பணம் கைப்பற்றப்பட்டது.

குறித்த 50 இலட்சம் ரூபாவில் 15 இலட்சம் ரூபா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மீட்கப்பட்டது. எஞ்சிய 35 இலட்சம் ரூபா நேற்று கல்முனை ஷியாமின் மாமனாரின் இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது. அவ்வீட்டில் அலுமாரியொன்றில் இருந்த காற்சட்டை பைகள் மற்றும் இருவட்டுக்கள் இயக்கப்படும் இயந்திரம் ஒன்றில் இருந்து இப்பணம் மீட்கப்பட்டது. அத்துடன் அவ்வீட்டில்; இருந்து ஒருதொகை நகைகளும் கைப்பற்றப்பட்டன.

கல்முனை ஷியாமினால் அட்டாளைச்சேனை கலப்பு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த லெப்டொப் கணினியொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சஹ்ரானின் சகோதரர் குண்டை வெடிக்க வைப்பதற்கு முன்னர் குறித்த பணம் மற்றும் லெப்டொப்பை தன்னிடம் ஒப்படைத்ததாக ஷியாம் தெரிவித்துள்ளார். குறித்த லெப்டொப் சஹ்ரானினால் பயன்படுத்தப்பட்டதென கருதப்படுகின்றது. இதில் உள்ள தரவுகள் தற்போது ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor மே 31, 2019 18:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க