fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் 2 வது போட்டி இன்று

ITN News Editor
By ITN News Editor மே 31, 2019 15:03

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் 2 வது போட்டி இன்று

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் 2 வது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் போட்டியில் மோதவுள்ளன. பிற்பகல் 3 மணிக்கு நொட்டிங்ஹேம் , ட்ரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை உலக கிண்ண கிரிக்கட் தொடருக்காக நேற்று இடம்பெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 311 ஓட்டங்களை பெற்றது.

பென் ஸ்டொக்ஸ் 89 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அணித்தலைவர் இயன் மோர்கன், ஜோரூட் மற்றும் ஜேஷன் ரோய் ஆகியோர் அரைச்சதம் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் நிகிடி 3 விக்கெட்டுக்களையும் ரபாடா மற்றும் இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பதிலுக்கு 312 ஓட்டங்களை வெற்றியிலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாரிபிரிக்க அணி 39.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. குயின்டன் டிக்கொக் 68 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் ஜொப்ரா ஆச்சர் 3 விக்கெட்டுக்களையும் ப்ளன்கட் மற்றும் பென் ஸ்டொக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். சகல துறைகளிலும் பிரகாசித்த பென் ஸ்டொக்ஸ் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவானார்.

ITN News Editor
By ITN News Editor மே 31, 2019 15:03

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க