புகையிலை பயன்பாடு காரணமாக ஏற்படும் நோய்களை தடுக்க தேசிய வருமானத்தில் 22% செலவிடப்படுகின்றது

ITN News Editor
By ITN News Editor மே 31, 2019 14:55

புகையிலை பயன்பாடு காரணமாக ஏற்படும் நோய்களை தடுக்க தேசிய வருமானத்தில் 22% செலவிடப்படுகின்றது

புகையிலை பயன்பாடு காரணமாக ஏற்படும் நோய்களை தடுக்க தேசிய வருமானத்தில் 22 வீதம் செலவிடப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புகையிலை மற்றும் மதுபான விற்பனையினால் இலங்கையின் தேசிய வருமானத்திற்கு 12 வீதமே கிடைப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. புகையிலை பயன்பாடு மற்றும் மது பாவனையினால் ஏற்படும் சமூக பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

புகையிலை பாவனையை பலவீனப்படுத்துவதற்காக புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. உலக புகைத்தல் எதிர்ப்பு தினம் இன்றாகும். புகைப் பாவனையால் 4 செக்கன்களுக்கு ஒருவர் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்த்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சிகரெட் விற்பனையை மட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சிகரெட் பெட்டியில் எச்சரிக்கை புகைப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளன. அரசாங்கம்மேற்கொண்ட செயற்பாடுகள் காரணமாக புகைப்பிடிப்போரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் சிகரெட் விற்பனையும் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 31, 2019 14:55

Default