fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கைக்கு வருகை தந்த 75 பாகிஸ்தான் குடியேறிகள் வவுனியா இராணுவ முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்

ITN News Editor
By ITN News Editor மே 31, 2019 13:23

இலங்கைக்கு வருகை தந்த 75 பாகிஸ்தான் குடியேறிகள் வவுனியா இராணுவ முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்

கடந்த காலங்களில் இலங்கைக்கு வருகை தந்த 75 பாகிஸ்தான் குடியேறிகள் வவுனியா இராணுவ முகாமுக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று அழைத்துச்செல்லப்பட்டனர்.

இவர்கள் இதற்கு முன்னர் நீர்கொழும்பு பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பல வருடங்களாக வேறு நாடுகளுக்கு செல்லும் நோக்கில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலுககு மததியில் நீர்கொழும்பு பகுதியில் வாழ்ந்து வந்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து தமது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து இவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதற்கு அமைய இவர்கள் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் தலையீட்டுடன் அம்பலந்தோட்டை பகுதியில் உள்ள சமூக நிலையம் ஒன்றில் தங்க வைப்பதற்கு பொலிசார நடவடிக்கை எடுத்ததனர். பின்னர் இவர்களினால் தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுததல் காணப்படுவதாக தெரிவித்து அம்பலாந்தோட்டை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து இப்பாகிஸ்தான் குடியேறிகள் வவுனியா பகுதியில் அமைந்துள்ள நலன்புரி முகாமில் தங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor மே 31, 2019 13:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க