நாட்டிலுள்ள சகல பாடசாலைகளதும் சிற்றுண்டிச்சாலைகளை சோதனையிடவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் யுஇடீ என வகைப்படுத்தப்படும். விற்பனை செய்யப்படவேண்டிய உணவுகளின் அட்டவணையும் வழங்கப்படுமென கல்வி அமைச்சின் சுகாதார மற்றும் போஷாக்கு பிரிவு அறிவித்துள்ளது.
தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு சுகாதார பிரிவு திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. மாணவர்களுக்கு போஷாக்கு மிக்க உணவு வழங்கப்படவேண்டும். அவர்களுக்கு போஷாக்கு மிக்க உணவை வழங்க முடியாத சந்தர்ப்பத்தில் பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் அதை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டுமென கல்வி அமைச்சின் சுகாதார மற்றும் போஷாக்கு பிரிவு தெரிவித்துள்ளது.