fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான மனுவை விசாரிக்க முழுமையான நீதியரசர் குழுவொன்றை அமைக்குமாறு கோரிக்கை

ITN News Editor
By ITN News Editor மே 31, 2019 13:24

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான மனுவை விசாரிக்க முழுமையான நீதியரசர் குழுவொன்றை அமைக்குமாறு கோரிக்கை

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிரான மனுவை விசாரிக்க நீதவான் குழுவை அமைக்குமாறு சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க தவறியதாக இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்டநடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் மனுவை விசாரிக்க ஐவர் அல்லது அதற்கு மேற்பட்ட நீதியரசர்கள் குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர் உச்சநீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார். மனுவை எதிர்வரும் 6 ம் திகதி விசாரிக்க மூவரடங்கிய நீதியரசர் குழு தீர்மானித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 31, 2019 13:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க