இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் குறுகிய விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தர எதிர்பார்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் அறிவித்துள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 7 மற்றும் 8ம் திகதிகளில் மாலைதீவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது கடந்த ஏப்ரல் 21ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டு தாக்குதல் தொடர்பாக கண்டறிவதற்காக இலங்கைக்கு குறுகிய விஜயம் ஒன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும் இது மாலைதீவு விஜயத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ இடம்பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இதனை இந்திய வெளியுறவு அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யவில்லை.