கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் நாளை முதல் அதகிரிக்கப்படவுள்ளது. சாதாரண சேவையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் 3 ஆயிரம் ரூபாவிலிருந்து 3 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்கப்படுமென குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டளர் பஸ்ஸன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் 10 ஆயிரம் ரூபாவிலிருந்து 15 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும். 16 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கான கடவுச்சீட்டு கட்டணம் 2 ஆயிரம் ரூபாவிலிருந்து 2 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்கப்படும்.
ஒருநாள் சேவையில் பெற்றுக்கொள்வதாயின் கட்டணம் 5 ஆயிரம் ரூபாவிலிருந்து 7 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டில் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்காக அறவிடப்பட்ட 500 ரூபா கட்டணம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.