fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பயங்கரவாத தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor மே 31, 2019 12:10

பயங்கரவாத தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை

பயங்கரவாத தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுலா, போக்குவரத்து மற்றும் கலைத்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த துறைகளுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கப்படுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறைக்கு இதற்கு முன்னரும் நிவாரணங்கள் பல வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய நிவாரண பொதி திட்டத்திற்குள் சுற்றுலா துறையுடன் தொடர்புடைய அனைத்து பிரிவினரையும் இணைத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையில் ஈடுபடுகின்றவர்களுக்கு புதிய கடன் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரதேச அபிவிருத்தி வங்கி மூலம் வட்டியற்ற கடன் வழங்கப்படும். கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்காக ஒரு வருட நிவாரண காலமும் வழங்கப்படும்.

இதேவேளை தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்காக நிவாரணங்கள் வழங்கப்படும். இதுதொடர்பான சுற்றுநிரூபம் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இசை நிகழ்சிச்சிகளை நடத்தும் இசைக்குழு உறுப்பினர்கள் பெற்றுள்ள கடன் மற்றும் குத்தகைகளுக்கு நிவாரண காலம் வழங்கப்படும். நாளைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் 3.4 வீத நிவாரண வட்டியுடன் 5 இலட்சம் ரூபா கடன் வழங்கும் தி;;ட்டமும் ஆரம்பமாகவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 31, 2019 12:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo