ரயிலின் ஊடாக பொதிகளை கொண்டுசெல்லும் நடவடிக்கை நாளை முதல் மீள ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலின் பின்னர் ரயிலில் பயணிகள் பொதிகளை கொண்டுசெல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் நாளை முதல் நாடு முழுவதுமுள்ள ரயில்பயணிகள் ரயில்களில் பொதிகளை எடுத்துச் செல்ல வாய்ப்பு வழங்கப்படுமென ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.