இஸ்ரேலிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது
Related Articles
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவால் கூட்டணி அரசு அமைக்க முடியாமல் போனதையடுத்து இஸ்ரேலிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதிய தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் 17 ம் திகதி தேர்தல் நடைபெறுமென இஸ்ரேல் தகவல்கள் தெரிவிக்கின்றன. 120 இடங்களை கொண்ட இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் கடந்த மாதம் தேர்தல் இடம்பெற்றது.
இதன்போது நெத்தன்யாஹூவின் லிகுட் கட்சி 35 இடங்களை மாத்திரம் வென்றது. வலதுசாரி கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சி அமைக்க பெஞ்சமின் முயற்சித்தபோதும் அது முடியாமல்போனதாக இஸ்ரேல் தகவல்கள் தெரிவிக்கின்றன.