fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதிய விமான படை தளபதி இன்று தனது கடமைகளை ஆரம்பித்தார்

ITN News Editor
By ITN News Editor மே 30, 2019 15:16

புதிய விமான படை தளபதி இன்று தனது கடமைகளை ஆரம்பித்தார்

புதிய விமான படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் இன்று தனது பதவிக்கான கடமைகளை ஆரம்பித்தார்.

விமான படை தலைமையகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை விமான படையின் 17வது விமான படை தளபதியாக எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் இன்று தனது பணிகளை ஆரம்பித்தார். இவரை கௌரவிக்கும் வகையில் அணி வகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.

தொடர்ந்து அவர் அங்கு வருகை தந்திருந்த விமான படை வீரரகள் மத்தியில் உரையாற்றினார் :

“பெருமை மிக்க இலங்கை விமானப்படையின் விமானப்படைத் தளபதியாக என்னை நியமித்தமைக்காக ஜனாதிபதிக்கு என இதயபூரவமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய விமானப்படைத் தளபதி என்ற வகையில் இலங்கையின் விமானப்படை முன்னேற்றத்திற்காக என் எதிரேயுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு நவீன மற்றும் ஒழுக்க விழுமியமிக்க விமானப்படையொன்றை உருவாக்குவதற்கு நான்பாடுபடுவேன் என்று இங்கு நான உறுதியளிக்கிறேன். அதற்காக நீங்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என நான் கருதுகிறேன். தாய்நாட்டிற்கு ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்போம். அத்துடன் அபிவிருத்தி திட்டங்களுக்கான பங்களிப்பை தொடர்ந்தும் நான் வழங்குவேன்.”

ITN News Editor
By ITN News Editor மே 30, 2019 15:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க