சுயாதீன தொலைகாட்சியின் புதிய செயற்பாட்டு பணிப்பாளராக கெலும் பாலித்த மஹிரட்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் 1988ம் ஆண்டு தேசிய தொலைகாட்சியில் பயிலுனர் தயாரிப்பு உதவியாளராக தனது ஊடக பணியை ஆரம்பித்த கெலும் பாலித்த மஹிரட்ன 12 வருடங்கள் தேசிய தொலைகாட்சியில் கடமையாற்றினார். பின்னர் அங்கு நிறைவேற்று தயாரிப்பாளராக பணியாற்றிக்கொண்டிருந்த போது, அங்கிருந்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து சுவர்னவாஹினி தொலைகாட்சியில் இணைந்து கொண்ட அவர் அங்கு எட்டு வருடங்கள் நிகழ்ச்சி பணிப்பாளராகவும் தயாரிப்பு துறைக்கான பணிப்பாளராகவும் தனது பங்களிப்பை வழங்கினார். சுவர்னவாஹினி தொலைகாட்சியின வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய அவர், சியத்த தொலைகாட்சியில் பணிப்பாளராக இணைந்து கொண்டார்.
அங்கு அவர் இரண்டு வருடங்கள் பணியாற்றினார். திரைப்படங்கள், தொலைகாட்சி விளம்பரங்களை இயக்கியுள்ள அவர், முதல் முறையாக சுயாதீன ஊடக வலையமைப்பில் 2019ம் ஆண்டு பணிப்பாளர் சபையின் உறுப்பினராக இணைந்து கொண்டார். இன்றைய தினம் அவர், வலையமைப்பின் தலைவர் திருமதி திலக்கா ஜயசுந்தர முன்னிலையில் செயற்பாட்டு பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் வலையமைப்பின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.