fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யாழ் சாவகச்சேரி சந்தை வியாபாரிகள் இன்று நகர சபைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ITN News Editor
By ITN News Editor மே 29, 2019 17:38

யாழ் சாவகச்சேரி சந்தை வியாபாரிகள் இன்று நகர சபைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ் சாவகச்சேரி சந்தை வியாபாரிகள் இன்று கடைகளை அடைத்து நகர சபைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். நகர சபை தனியாருக்கு வழங்கியுள்ள சந்தை குத்தகையை மீள பெற வேண்டுமென்றும் அறவிடப்படும் வரி குறைக்கப்பட வேண்டுமென்றும், மலசலகூட வசதிகள் தரமாக செய்து தரப்படவேண்டுமென்ற கோரிக்கைகயை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சந்தையில் இருந்து பேரணியாக சென்ற வியாபாரிகள் ரயில் நிலைய வீதி வழியாக சாவகச்சேரி நகர சபையை சென்றடைந்தனர். நகர சபை தவிசாளர் சிவமங்கை ராமநாதனிடம் மகஜர் ஒன்றையும்கையளித்தனர். கடையடைப்பு காரணமாக விவசாயிகளும் பொது மக்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor மே 29, 2019 17:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க