fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் நிவாரணங்கள் மற்றும் பிரதிலாபங்கள் மேலும் அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor மே 29, 2019 14:30

எண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் நிவாரணங்கள் மற்றும் பிரதிலாபங்கள் மேலும் அதிகரிப்பு

எண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை 81 பில்லியன் ரூபா பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் மத்திய தர தொழில்முயற்சியாளர்கள், இளம் சமுதாயத்தினர், பெண் தொழில் முயற்சியாளர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கும் வகையில் எண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தினூடாக நிவாரண வட்டி அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் இவ்வேலைத்திட்டத்தை மேலும் விஸ்தரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய தங்க அறுவடை, ரிய சக்தி, ஹோம் சுவீட் ஹோம், கனவு மாளிகை, சிட்டி ரைட், ஜய இசுரு, மின் டெக்சி, இலத்திரனியல் முச்சக்கர வண்டி மற்றும் எனது எதிர்காலம் ஆகிய திட்டங்களினுடாக வழங்கப்படுகின்ற கடன் முறைமையை எதிர்காலத்தில் மேம்படுத்தவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மக்களுக்கு வழங்கப்படுகின்ற நிவாரணங்கள் மற்றும் பிரதிலாபங்களை மேலும் அதிகரிக்கவே இவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இது தொடர்பாக அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 29, 2019 14:30

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.31178.06
USA
Pound219.38226.29
UK
Euro195.48202.19
EU
Yen1.591.65
Japan
Yuan25.1126.28
China
Dollar120.42125.45
Australia
CountryCurrencyRate
Dinar467.71
Dinar580.41
Riyal457.99
Riyal48.42
Riyal47.01
Dirham48.00