fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுவிட்சர்லாந்து அந்நாட்டு பிரஜைகளுக்கு விதித்திருந்த இலங்கைக்கான சுற்றுலா தடை நீக்கம்

ITN News Editor
By ITN News Editor மே 28, 2019 19:11

சுவிட்சர்லாந்து அந்நாட்டு பிரஜைகளுக்கு விதித்திருந்த இலங்கைக்கான சுற்றுலா தடை நீக்கம்

சுவிட்சர்லாந்து அந்நாட்டு பிரஜைகளுக்கு விதித்திருந்த இலங்கைக்கான சுற்றுலா தடை நீக்கியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளமையினால் சுற்றுலா தடையை நீக்க தீர்மானித்ததாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்தது. கடந்த ஏப்ரல் 21ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலினால் இலங்கையர்களும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உயிரிழந்தமையை தொடர்ந்து. சுவிட்சர்லாந்து அந்நாட்டு மக்களுக்கு இலங்கைக்கான சுற்றுலா பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுரை வழங்கியிருந்தது. இன்று முதல் அத்தடைகள் நீக்கப்படுவதாகவும் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தி, சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளுமாறும் சுவிட்சர்லாந்து வெளியுறவு திணைக்களம் அந்நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 28, 2019 19:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க