fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஏப்ரல் 21ம் திகதி தாக்குதலினால் தொழில் வாய்ப்புக்களை இழந்த இசை குழுக்களுக்கு நிவாரணம்

ITN News Editor
By ITN News Editor மே 28, 2019 19:10

ஏப்ரல் 21ம் திகதி தாக்குதலினால் தொழில் வாய்ப்புக்களை இழந்த இசை குழுக்களுக்கு நிவாரணம்

ஏப்ரல் 21ம் திகதி தாக்குதலினால் தொழில் வாய்ப்புக்களை இழந்த இசை குழுக்களு நிவாரணம் வழங்குவது தொடர்பான அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இசை குழுக்கள் இசை கச்சேரிகளை நடத்தும் வாய்ப்பை இழந்துள்ளன. ஏற்பட்ட நிலைமைக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இசை குழுக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துள்ளனர். 15 இசைக்குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் இணைந்திருந்தார்.

இசைக்கச்சேரிகளை நடத்த முடியாமையினால் தமது அங்கத்தவர்களுக்கு கொடுப்பனவுகளை கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இசை கருவிகளுக்கான வாடகைகளை வழங்குவதற்கும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சரிடம் இவர்கள் தெரிவித்தனர். இதற்காக ஏதேனும் நிவாரணம் வழங்குமாறு அவர்கள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவை கேட்டுள்ளனர்.

ஏப்ரல் 21 தாக்குதலை தொடர்ந்து பல்வேறு துறைகளில் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து வழங்கப்பட வேண்டிய நிவாரணங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் இது தொடர்பாக நிதியமைச்சு ஒரு தீர்மானத்திற்கு வரவுள்ளதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor மே 28, 2019 19:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க