தமிழ், தெலுங்கினை தொடர்ந்து ஹிந்தியில் தடம் பதிக்கும் கீர்த்தி
Related Articles
மிக குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முதன்மை இடத்தை பிடித்து விட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் சாவித்திரி வாழ்க்கை படத்தில் யாரும் எதிர்பாராத வகையில் கீர்த்தியின் நடிப்புக்கும் நாடு முழுக்க வரவேற்பு கிடைத்தது. ரசிகர்களின் ஆதரவில் அதிர்ந்து போன கீர்த்தி சுரேஷ். அடுத்த படத்தை தேர்வு செய்ய காலம் எடுத்துக்கொண்டார்.
தற்போது இந்தியில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து பாலிவுட் படங்களில் மட்டும் நடிக்க முடிவு செய்து இருக்கிறார். இதற்காக மும்பையில் ஒரு வீடு வாங்கியுள்ளார். அங்கு விரைவில் குடியேற இருப்பதாக தகவல் வருகிறது.