fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழப்புக்கள் அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor மே 28, 2019 15:53

இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழப்புக்கள் அதிகரிப்பு

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும், மலையேற்ற வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக நேபாள அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. உரிய அனுமதி பெற்று, ஷெர்பாக்களின் வழிகாட்டுதலின்படி மலையேற்ற வீரர்கள் மலையேற்றத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால், இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு சீசனில் இதுவரை 16 பேரை இறந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அளவிற்கு எவரெஸ்டில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு அதிகரிப்பதற்கு காரணம், நேபாள அரசு அளவுக்கு அதிகமாக பெர்மிட்டுகளை வழங்குவதுதான் என கூறப்படுகிறது. பெர்மிட்டுகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என மலையேற்ற வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அதிக பெர்மிட்டுகள் வழங்குவதும் மட்டும்தான் உயிரிழப்புக்கு காரணம் என்ற குற்றச்சாட்டை நேபாள அரசு மறுத்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 28, 2019 15:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க