அபிவிருத்திக்கென வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி உரிய முறையில் செலவிடப்பட வேண்டும் : பிரதமர்
Related Articles
வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து நிதியும் அபிவிருத்தி பணிகளுக்கு முறையாக செலவிடப்படுவது முதற்பணியாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பனை அபிவிருத்தி நிதியத்தை ஏற்படுத்தும் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அமைச்சர் மங்கள சமரவீரவும் இதில் கலந்து கொண்டார்.
வடக்கு கிழக்கு அபிவிருத்தி பணிகளை துரிதமாக்கும் வகையில் பனை அபிவிருத்தி நிதியத்தை ஏற்படுத்தும் நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெறறது. இந்நிதியத்தின் கீழ் வடக்கு கிழக்கு பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகளை துரிதமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் அபிவிருத்தி தொடர்பாக தற்போதையஅரசாங்கம் பாரிய பொறுப்புடன் செயற்படுவதாகவும் பிரதமர் அங்கு தெரிவித்தார்.