கடந்த 6 மாதங்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 17 ஆயிரத்து 975 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் 26 பேர் மரணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 3 ஆயிரத்து 909 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 25 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 75 பேர் பதிவாகியுள்ளனர். பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பித்துள்ளமையால் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் காணப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கும் பணிகளை பொதுமக்கள் மேற்கொள்ளவேண்டுமென தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.