குளவி கொட்டுக்கு இலக்காகி 51 பேர் வைத்தியசாலையில்

ITN News Editor
By ITN News Editor மே 26, 2019 15:30

குளவி கொட்டுக்கு இலக்காகி 51 பேர் வைத்தியசாலையில்

மினுவாங்கொட பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 51 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் சிரமதானத்தில் ஈடுபட்டிருந்தவர்களே குளவித்தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர். பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களே பாடசாலையில் சிரமதான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இவ்வாறு குளவித்ததாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக மினுவாங்கொட பொலிசார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மினுவாங்கொட பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மே 26, 2019 15:30

Default