fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை

ITN News Editor
By ITN News Editor மே 26, 2019 15:06

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூட்டம் இடம்பெறவுள்ளதாக கட்சித்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அனைவரும் பங்கேற்கவேண்டுமென மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரிஷாட் பதூர்தீனுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கூட்டத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளது. இதேவேளை 20க்கும் அதிகமான விடயங்களை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் தொடர்பான இடைக்கால அறிக்கையொன்றும் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 26, 2019 15:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க