fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்றைய தினமும் பயிற்சி ஆட்டங்கள்

ITN News Editor
By ITN News Editor மே 26, 2019 15:02

இன்றைய தினமும் பயிற்சி ஆட்டங்கள்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை முன்னிட்டு இன்றையதினமும் இரு பயிற்சி ஆட்டங்கள் இடம்பெறவுள்ளன. பிறஸ்டலில் இடம்பெறும் போட்டியில் தென்னாபிரிக்க மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதவுள்ளன. தென்னாபிரிக்க அணிக்கு பெப் டூ பிளெஸிஸும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜேசன் ஹோல்டரும் தலைமைதாங்கவுள்ளனர். இந்நிலையில் இன்று இடம்பெறவுள்ள இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் பங்களாதேஷ்; மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. கார்டிப்பில் போட்டி இடம்பெறும். பங்களாதேஷ் அணிக்கு மஷ்ரபி மோர்தசாவும், பாகிஸ்தான் அணிக்கு சப்ராஸ் அஹமட்டும் தலைமைதாங்கவுள்ளனர். இதேவேளை ஏற்கனவே இடம்பெற்ற பயிற்சி ஆட்டமொன்றில் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 26, 2019 15:02

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க