கிம் ஜொங் உன் மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைத்துள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு
Related Articles
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இன்றையதினம் ட்ரம்ப் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் வடகொரிய தலைவர் குறித்து இவ்வாறு பதிவொன்றை மேற்கொண்டுள்ளார். வடகொரிய தலைவரின் அண்மைக்கால செயற்பாடுகள் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதுதொடர்பில் அமெரிக்கா ஆராய்ந்து வருவதுடன் வடகொரிய தலைவர் தமக்கு எதிராக செயற்பட மாட்டார் என்பதில் நம்பிக்கை உள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வடகொரிய ஆயுத பரிசோதனையில் மீண்டும் ஈடுபட்டது. குறித்த செயற்பாடு தமது மக்களையும், மற்றவர்களையும் தாக்கத்திற்கு உட்படுத்திய போதும் அதனால் தான் கவலையடையவில்லையென ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தனது வாக்குறுதிகளை தொடர்ந்தும் காப்பாற்றுவாரென்பதில் தனக்கு கூடுதல் நம்பிக்கையுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.