fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பென்ஜமினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ITN News Editor
By ITN News Editor மே 26, 2019 14:42

பென்ஜமினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்நாட்டு டெல் அவீவ் பகுதியிலுள்ள அருங்காட்சியக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்கு ஆதரவாக செயற்படும் தரப்பினர் மற்றும் இஸ்ரேல் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு தனக்கு எதிராக வழக்கு தொடர்வதிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதற்கு எந்த வகையிலும் இடமளிக்கக்கூடாதென பேரணியில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதேவேளை கடந்த மாதம் இஸ்ரேலில் பொதுத்தேர்தல் இடம்பெற்றது. இதில் 5வது தடவையாகவும் பிரதமராக பதவி வகிக்கும் வாய்ப்பை பென்ஜமின் நெதன்யாஹு பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 26, 2019 14:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க